‘தன் இஷ்டத்துக்கு எல்லாம்’.. ‘இந்தியாவுக்காக விளையாட முடியாது’.. ‘தோனி மீது பிரபல வீரர் காட்டம்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 27, 2019 10:45 AM

தோனி தன் இஷ்டத்துக்கு ஒரு தொடரில் விளையாடவோ, அதிலிருந்து விலகவோ முடியாது என கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

MS Dhoni Should Not Pick And Choose Series Says Gautam Gambhir

தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், “ஓய்வை அறிவிப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட முடிவு. அணித்தேர்வுக் குழுவினர்தான் தோனியிடம் பேசி எதிர்கால திட்டம் என்ன என்பதை விவாதிக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், இந்திய அணிக்காக விளையாடும் ஒரு வீரர் தன் இஷ்டத்துக்கு ஒரு தொடரில் விளையாடுவேன், அடுத்த தொடரில் இருந்து விலகுவேன் என தொடர்களை தேர்வு செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.

மேலும் ரிஷப் பந்த் பற்றிப் பேசியுள்ள அவர், “ரிஷப் பந்தின் ஷாட் தேர்வு எப்போதும் சரியாகவே இருக்க முடியாது என்பதை அணி நிர்வாகம்  புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய நாளில் அவர் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்” எனக் கூறியுள்ளார்.

Tags : #MSDHONI #GAUTAMGAMBHIR #TEANINDIA #RISHABHPANT