உடல்நிலையில் ஏற்பட்ட 'திடீர்' பின்னடைவு... ப்ளைட்டில் மருந்து அனுப்பி 'உதவிய' தெலுங்கானா ஆளுநர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எம்.எல்.ஏ அன்பழகனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மருந்து அனுப்பி உதவி செய்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று திடீரென அவருடைய உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு remdesivir 100mg என்ற மருந்தை ப்ளைட்டில் அனுப்பி உதவி செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் இந்த மருந்து கிடைப்பதால் மருத்துவமனை நிர்வாகம் தமிழிசை சௌந்தரராஜன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து தமிழிசை உத்தரவின் பேரில் அந்த மருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதையறிந்த பலரும் அவரது மனிதாபிமான செயலை பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
