முதியவர்களை தாக்கிய கொரோனா ... அசத்திய ராஜஸ்தான் மருத்துவர்கள் ... பயன்படுத்திய மருந்து என்ன ?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 16, 2020 05:18 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மூன்று வயது முதிர்ந்த நோயாளிகளை பல மருந்துகளின் கலவைகள் மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியதற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Rajasthan Doctors saved three elders from Corona Virus

சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரசின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று மூலம் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மூன்று பேரை மருந்துகள் சிலவற்றின் கலவை கொண்டு குணப்படுத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 402 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு அதில் 393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஐந்து பேரின் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இத்தாலியிலிருந்து திரும்பிய 69 வயது முதியவர், துபாயிலிருந்து திரும்பிய 85 வயது மூதாட்டி, இத்தாலியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட மூவரும் முதியவர்கள். முதியவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்ற போதும் ராஜஸ்தான் மருத்துவர்கள் அவர்களை மீதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்களை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகையில், 'எச்ஐவி, மலேரியா, ஸ்வைன் ப்ளூ மருந்துகளைக் கலவையாகப் பயன்படுத்திக் குணப்படுத்தியுள்ளோம். எங்களது இந்த கலவை மருந்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அமைப்பும் அனுமதியளித்தது' என தெரிவித்தனர்.

 

 

Tags : #RAJASTHAN #CORONA VIRUS