'இனி' அவ்வளவுதான் 'வாழ்க்கை' முடிந்தது என... நினைத்த 'புற்று நோயாளிகளைக்' கூட.... 'கொரோனாவிலிருந்து' மீட்ட 'சென்னை மருத்துவர்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 14, 2020 01:53 PM

சென்னையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 20 நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருந்தாலும் இவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதன் முலம் அவர்கள் நோய்த் தாக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Chennai doctors who saved 20 cancer patients from corona

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் பலர் எவ்வித தீவிர விளைவுகளும் இன்றி குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அதிகம். வயதானவர்களுக்கும், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதில் குறிப்பாக இதுவரை 22 புற்றுநோய் நோயாளிகள், 15 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், இரண்டு எச்ஐவி நோயாளிகள் மற்றும் இரண்டு கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள் கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொற்று ஏற்பட்ட 22 கேன்சர் நோயாளிகள் இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 22 புற்றுநோய் நோயாளிகளில் வாய் தொண்டை மற்றும் கழுத்துப்பகுதி பாதிக்கப்பட்ட 13 பேரும், மலக்குடல் புற்றுநோய் நோயாளி ஒருவரும், கர்ப்பப்பை புற்றுநோய் நோயாளிகள் இரண்டு பேரும், கர்ப்பப்பை வாய் புற்று நோய் கொண்ட இரண்டு பேரும், தொடையில் புற்றுநோய் ஏற்பட்ட ஒருவரும், ரத்த புற்றுநோய் ஏற்பட்ட மூன்றுபேரும் குணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. இருப்பினும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சையால் அவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளது நம்பிக்கை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.