'என்ன மீறியா கல்யாணம் பண்ற'...'இரு பாத்துக்குறேன்'...'கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 07, 2019 03:16 PM

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த வாலகுருநாதன் என்பவரது மகள் சுஷ்மா. இவருக்கும் சிவசங்கரன் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில்  எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

Man attacked his daughter for love marriage

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஷ்மாவும், சிவசங்கரனும் நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது. வாழவந்தான்புரத்தில் உள்ள சிவசங்கரன் வீட்டில் அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் சுஷ்மா கர்பமடைந்தார். 2 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் புதுப்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு, மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட சுஷ்மாவின் தந்தை வாலகுருநாதன் அரசு மருத்துவமனைக்கு சென்று, சுஷ்மாவிடம் நலம் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் சுஷ்மாவும் அவரது கணவரும் மருத்துவரை பார்க்க அவரது அறைக்கு செல்ல, அவர்களை பின்தொடர்ந்து வாலகுருநாதனும் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சுஷ்மாவை வெட்டினார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வாலகுருநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #ATTACKED #LOVE MARRIAGE