'திருமணத்தை நிறுத்த மணப்பெண் செய்த காரியம்'... 'அதிர்ச்சியடைந்த மணமகன்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 10, 2019 02:48 PM

தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த, மணப்பெண் மயங்கி விழுந்து நிறுத்திய சம்பவம் கன்னியாகுமரியில் நடைப்பெற்றுள்ளது.

bride stopped the marriage and refused in kanyakumari

குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், பாகோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த செவ்வாய்கிழமை காலை திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக பாகோடு பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண நிகழ்ச்சிகள் தொடங்கிபோது மணமகனின் கையில், மணமகளின் கையை பிடித்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வாக்குறுதிகள் வாசிக்கப்பட்டபோது, அந்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வதாக கூற வேண்டிய மணப்பெண், திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்குள்ள அறைக்கு கொண்டுசெல்லப்பட்ட மணப்பெண்ணை மருத்துவர் பரிசோதித்தார். அதில் அந்த இளம்பெண்ணுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று மருத்துவர் கூறினார். அப்போது திடீரென அந்த இளம்பெண், மருத்துவரின் கையை பிடித்துக்கொண்டு ‘என்னை காப்பாற்றுங்கள், எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. எனவே திருமணத்தை நிறுத்துங்கள்’ என கெஞ்சினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் உள்பட, பலரும் பேசிப் பார்த்தும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் மணமகளின் சம்மதம் இல்லாமல் திருமணத்தை நடத்தினால், சட்ட சிக்கல் ஏற்படும் எனக் கூறி திருமணம் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் உருவானது. அப்போது பிரச்னை செய்யாமல் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : #MARRIAGE #BRIDE #KANYAKUMARI