VIDEO :'முப்பது' நாட்கள் அயராது 'உழைப்பு'... பணிமுடிந்து திரும்பிய 'பெண்' மருத்துவருக்கு... 'அசத்தல்' வரவேற்பு... ஆனந்த கண்ணீரால் நன்றி சொன்ன மருத்துவர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அருகில் இருந்து ஆபத்தான சூழ்நிலையில் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனையில் முப்பது நாட்களாக அயராது உழைத்து வீடு திரும்பிய பெண் மருத்துவர் ஒருவரை அவரது பிளாட் பகுதியில் குடியிருக்கும் அனைத்து மக்களும் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த சம்பவத்தால் நெகிழ்ந்து போன பெண் மருத்துவர் ஆனந்த கண்ணீர் வடித்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். இந்தியாவில் முன்னதாக சில குடியிருப்பு பகுதிகளில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் வசித்து வந்த நிலையில் அவர்களை வீடுகளின் உரிமையாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததால் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டும் எனக் கூறி மருத்துவர்களை தவிர்த்து வந்தனர்.
அப்படி இருக்கையில் ஒட்டுமொத்த பிளாட் மக்களும் ஒரு பெண் மருத்துவருக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.