'சிக்ஸ் பேக் உடம்பு'... '100 ரூபாய் கூலிங் கிளாஸ்'... 'இன்ஸ்டாகிராமில் காதல் லீலை'...மற்றொரு பொள்ளாச்சி கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 25, 2020 12:15 PM

பொள்ளாச்சி சம்பவத்தை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதன் வடுக்கள் பலரது மனதிலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது அதை நினைவுபடுத்தும் வகையில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Man Arrested for uploads obscene pictures of female Doctor in FB

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தான் காசி என்ற சுஜி. டிப்ளமோ இன்ஜினீயரிங் முடித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தந்தை இறைச்சி வியாபாரம் செய்து வந்ததால் காசிக்கு வெளியில் சுற்றப் பணத்திற்கும் குறைவு இல்லை. இந்த சூழ்நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய காசி அதன் மூலம் பெண்களுக்குத் தனது வலையை வீசத் தொடங்கியுள்ளார்.

அதில் தன்னுடைய குடும்பம் ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகிறது என்றும், தான் ஒரு தொழிலதிபர் என்றும் பெண்களிடம் கூறியுள்ளார். ஜீன்ஸ் பேண்ட், 100 ரூபாய் கூலிங் கிளாஸ், சிக்ஸ் பேக் உடம்பு எனப் பல விதமாகப் போட்டோ எடுத்து தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ஏமாந்த சில பெண்கள் காசியிடம் நெருங்கிப் பழகியுள்ளார்கள்.

அந்த வகையில் நட்பாகப் பழகிய சென்னை பெண் மருத்துவர் ஒருவரைக் காதல் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கான பணத்தைச் சுருட்டியுள்ளார் இந்த காசி. மேலும் எந்த பெண்ணிடம் பழகினாலும் அவர்களுடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்துக் கொள்வது தான் காசியின் வழக்கம். அதன் மூலம் தான் ஒரு மன்மதன் என்றும், எனக்குப் பின்னால் பல பெண்கள் சுற்றுகிறார்கள் என்றும் காட்டிக் கொள்வது காசியின் வழக்கம்.

அந்த வகையில் தன்னை நல்லவன் என்று நம்பி பழகிய சென்னை மருத்துவரிடம், தனது சுய ரூபத்தைக் காசி காட்டியுள்ளான். உன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ என்னிடம் இருக்கிறது. அதனை வெளியிடாமல் இருக்க எனக்குப் பணம் தர வேண்டும் எனக் காசி மிரட்டியுள்ளான். இதனைக் கேட்டு அதிர்ந்து போன அவர், காசி கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே பெண் மருத்துவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை போலியான முகநூல் பக்கத்தில் காசி வெளியிட அதனைப் பார்த்து அவர் அதிர்ந்து போனார். இதற்கு மேல் பொறுக்க முடியாது என காவல்துறையிடம் நடந்த சம்பவங்களைக் குறித்து விவரித்துள்ளார். இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காதல் மன்னனாக வலம் வந்த காசியைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள்.

மேலும் காசியிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து ஏராளமான பெண்களுடன் அவர் தனிமையில் இருந்த , புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்து காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். பல பெண்களிடம் தனிமையிலிருந்த காசி, அதனை வீடியோவாக எடுத்து அந்த பெண்களை மிரட்டி பணம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் முகநூலில் தான் ஒரு பெண்ணியவாதி எனக் காட்டி கொண்ட காசி, டிக்டாக்கில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய பாலியல் கொடூரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான். நல்லவன் என நினைத்து நட்பாக பழகும் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இதுபோன்ற காமுகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என, சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் முன்பின் தெரியாத நபர், பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் பேசும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எந்த அறிமுகமும் இல்லாமல் பழகும் மூன்றாவது நபரிடம், தங்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பெண்கள் பேசுவதை முற்றிலும் தவிர்ப்பதே சிறந்தது.

இதற்கிடையே பின்னணி பாடகி சின்மயி, தான் இந்த நபர் குறித்து சில வருடங்களுக்கு முன்பே குறிப்பிட்டு இருந்ததாகவும், தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி (Instagram Story) மற்றும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chinmayi Sripada (@chinmayisripaada) on