'ஊரடங்கை' நீக்குனதுக்கு அப்பறமும்.. மக்கள் இத 'கண்டிப்பா' ஃபாலோ பண்ணியே ஆகணும்.. மருத்துவர் அறிவுறுத்தல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் சமூக தனிநபர் இடைவெளியை தொடர வேண்டும் என மருத்துவ நிபுணர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக காணொலி மூலம் நடந்த மாநாட்டில் நொய்டா மருத்துவ நிபுணர் மருத்துவர் தேவி ஷெட்டி கலந்துகொண்டார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை குறித்து கவலை தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஊரடங்கை படிபடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து நோய் பரவிய இடங்களை சீல் வைத்து தொடர்ந்து கண்காணிக்கலாம். மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொருளாதார வளர்ச்சியை சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் சமூக தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வழியுறுத்தினார்.
Tags : #CORONAVIRUS #CORONA #DOCTOR #LOCKDOWN