'தமிழகத்தில் முன்னணி பெறும் திமுக கூட்டணி'... 'அறிவாலயத்தில்' குவிந்த தொண்டர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 23, 2019 10:18 AM
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுவது இந்திய நாடாளுமன்ற தேர்தலாகும். இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.இதில் தமிழகத்தை பொறுத்தவரை வேலூர் தொகுதி நீங்கலாக,38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
அதோடு ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இதையடுத்து நாடு முழுவதும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக நட்சத்திர வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.இதையடுத்து சென்னையில் உள்ள திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
