'வாக்கு எண்ணிக்கை தினம் என்பதால் தாய் நாட்டுக்காக ப்ரே பண்ணிக்கிறேன்!’.. மம்தா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 23, 2019 08:32 AM

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும் நிலையில், மம்தா பானர்ஜி பியானோ வாசித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

As counting day approaches,I pray for my motherland, Mamata Banerjee

நாடு முழுவதும்7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்கிற சூழலில், 542 தொகுதிகளில் நிகழ்ந்த தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் விறுவிறு நிலையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பியானோ இசைக்கருவி வாசித்துள்ள வீடியோ இணையதளத்தில் நேற்று முதல் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நேற்றைய தினம் மம்தா பானர்ஜி பியானோ வாசித்த இந்த வீடியோ, வாக்கு எண்ணிக்கை நாளான இன்று அனைவராலும் பகிரப்பட்டும் வருகிறது.

அதில், இன்று வாக்கு எண்ணிக்கை நிகழ்ந்து, தேர்தல் முடிவுகளும் வருவதால், ரவீந்திரநாத் தாகூர் எழுதிய அந்த பாடலை  தனது அன்னைக்கும் மக்களுக்கும் மண்ணுக்கும் சமர்ப்பிப்பதாகக் கூறி மம்தா பானர்ஜி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.