‘உறங்கிக் கொண்டிருந்த குடிசைவாசிகள்’.. மளமளவென பிடித்த தீவிபத்து! நள்ளிரவில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 1000 முதல் 1200 குடிசைகள் வரை எரிந்திருக்கலாம் என கூறப்படும் சம்பவம் பதறவைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அதிகாலை 3 மணி அளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தீ விபத்து நடந்தபோது பெரும்பாலான குடிசைவாசிகள் உறக்கத்தில் இருந்திருந்தாலும், தீ முழுமையாகப் பரவும் முன்பாக அவர்கள் விரைவாக தங்கள் குடிசைகளிலிருந்து வெளியேறத் தொடங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத் துறை அதிகாரி எஸ்.எஸ்.டுலி இதுபற்றி பேசியபோது, “தீ விபத்து பற்றிய தகவல் வந்ததுமே 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் இந்தப் பகுதியில் தீயணைப்புப் பணியை விரைவுபடுத்தினோம். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயணைப்பு வீரர்கள் முழுமையாக தீயை அணைத்தார்கள். எனினும் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.