"ரூம்குள்ள வெச்சு பெல்ட்டால அடிக்கவும் தெரியும்!".. 'அரண்டு போன' அதிகாரிகள்.. இணையமைச்சரின் சர்ச்சை பேச்சு!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது பல்ராம்பூர் பகுதி.

இங்குள்ள தனிமைப்படுத்தும் மையத்தை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணையமைச்சர் ரேணுகா சிங் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது “எங்களது அரசு மாநில ஆட்சியில் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்கள் இம்மாநிலத்தை 15 ஆண்டுகள் ஆண்டுள்ளோம். கொரோனாவை சமாளிக்க அரசிடம் பணம் போதுமான அளவில் இருக்கிறது. நான் மக்களுக்கு தேவையான பணம் கிடைப்பதை உறுதி செய்வேன். எங்களை பலவீனமாக கருத வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர், திடீரென மாநில அரசு அதிகாரிகளைப் பார்த்து, “அறைக்குள் வைத்து பெல்ட்டால் அடிப்பது எப்படி என்றுகூட எனக்குத் தெரியும்” என்று கூறுவதாக வீடியோ ஒன்றில் பதிவாகியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மாவட்டத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என இம்மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் குப்தா என்பவர் பேசிய வீடியோவை, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் பகிர்ந்துள்ளதால் அவர்களிடம் அமைச்சர் இப்படி கூறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
