மதுக்கடைகளை திறந்த ‘மாநிலம்’.. கட்டுக்கடங்காமல் குவிந்த ‘குடிமகன்கள்’.. காற்றில் பறந்த ‘சமூக இடைவெளி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 04, 2020 04:12 PM

இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

People stand in a queue outside a liquor shop in Delhi

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதனை அடுத்து டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள சுமார் 150 மதுக்கடைகளை திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலை காலை டெல்லியின் மாளவியா நகரில் உள்ல ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டது. சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் வரிசையாக நின்றுகொண்டிருந்த மக்கள், அடுத்த நொடியே கடைக்கு முன் கூடினர். உடனே கடையின் உரிமையாளர் போலீசாரை பாதுகாப்புக்கு அழைத்தார்.

இதேபோல் சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்படுத்தப்படுத்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ள மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. பல இடங்களில் மதுபானை கடைக்கு வெளியே சமூக இடைவெளியை பின்பற்ற வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. ஆனால் ராஜ்ந்நதகோன் என்ற இடத்தில் மதுக்கடையை திறந்தவுடன் ஏராளாமான மக்கள் குவிந்தனர். இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை காற்றில் பறந்தது.