நாட்டையே உலுக்கிய 'ஆபாச' உரையாடல் ... குரூப்ல ஒரு 'பொண்ணும்' இருந்துருக்கு... அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 10, 2020 11:50 PM

டெல்லி மாநிலத்தை சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற குரூப் ஒன்றை ஆரம்பித்து சக மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பாக பேசிய ஆபாச உரையாடல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

A girl use fake id finds in Boys locker room case

இந்த ஸ்க்ரீன் ஷாட்டுகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த செயலுக்காக நாட்டு மக்கள் முழுவதும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முதற்கட்டமாக 18 வயதான மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவர் தான் அந்த குரூப்பின் அட்மின் ஆவார்.

இந்நிலையில் தொடர்ந்து நடந்து வரும் விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த குரூப்பில் சித்தார்த் என்ற போலி பெயரில் பெண் ஒருவர் சாட் செய்து வந்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த பெண் தனது பெயரை 'சித்தார்த்' என குறிப்பிட்டு வேறு ஒரு முகமூடியில் தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தனது பெயரையே ஒரு மாணவனிடம் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்வது குறித்து பேச வேண்டி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த மாணவர் அந்த பெண்ணை குறித்து எதுவும் பேசவில்லை என தெரிகிறது. மேலும் அந்த பெண்ணும் இந்த ஐ.டி குறித்து வேறு யாரிடமும் பேசாமலும் இருந்து வந்துள்ளார்.

இணையத்தில் வெளியான ஸ்க்ரீன் ஷாட்டுகளில் சித்தார்த் பெயர் யார் என்பது அறியாமல் இருந்த நிலையில், விசாரணையில் அந்த அக்கவுண்ட் பயன்படுத்தி வந்தது ஒரு பெண் தான் என்பதனை கண்டுபிடித்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #DELHI