‘பெண் நண்பர்’ வீட்டு பால்கனில் இருந்து ‘துணியைக் கட்டி’ கீழே குதித்த பாஜக தலைவர்.. கட்சி எடுத்த ‘அதிரடி’ ஆக்ஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாஜக தலைவர் ஒருவர் பெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து துணியைக் கட்டி இறங்க முயன்று கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக உள்ளவர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21ம் தேதி சண்டிகரில் உள்ள தனது பெண் நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்குள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென யாரோ வருவது போல் சத்தம் கேட்டுள்ளது. உடனே இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து துணிகளைக் கட்டி கீழே இறங்க பிரகாஷ் காதுரியா முயன்றுள்ளார்.
ஆனால் எதிர்பாரத விதமாக துணிகள் அவிழ்ந்துவிட மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கால் காயமடைந்துள்ளது. இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது வைரலானது. இதனை அடுத்து அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்வதாக ஹரியானா மாநில பாஜக தலைவர் தெரிவித்தார். ஊரடங்கு சமயத்தில் பெண் நண்பரை பார்க்க சென்று பால்கனியில் இருந்து கீழே விழுந்த பாஜக தலைவரின் செயல் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
