'நெஞ்சுவலியால், டெல்லி எய்ம்ஸில் மன்மோகன் சிங்'.. 'இப்ப எப்படி இருக்கார்?' .. உடல் நிலை பற்றி வெளியான தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநெஞ்சு வலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(87), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அவரது உடல் நலம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்றிரவு 8.40 மணி அளவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மன்மோகன் சிங் தற்போது ஐசியுவில் எல்லாம் இல்லை என்றும், சாதாரண அறையில் அவருக்கு சிகிச்சை பெறுவதாகவும், அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளதாகவும் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1991 முதல் 1996 வரையில் மத்திய நிதியமைச்சர் பதவியிலும், 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் முதல் முறையாகவும், அதன் பின்னர் 2009ல் இரண்டாவது முறையாகவும் பிரதமராக டாக்டர் மன்மோகன் சிங் பதவியேற்றார். இவருக்கு மனைவி குர்சரண் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
