‘ஊரடங்கு நீட்டிப்பு’.... 'பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை’... 'தமிழகத்தில் உயர்ந்த பலி எண்ணிக்கை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 14, 2020 10:19 AM

ஊரடங்கு ஊத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்துள்ளார்.

Coronalockdown till May 3rd, PM Modi Addressing the nation

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர் உயிரிழந்தார். இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் சகோதரர் சகோதரிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் ட்வீட் செய்து பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

சீனாவில் இருந்து கொரோனா துரித பரிசோதனை கருவிகள் ஏப்ரல் 15-ம் தேதி இந்தியா வந்து சேரும் என எதிர்பார்ப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஊரடங்கால் தங்களது நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் வெளிநாட்டினரின் விசாவை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மேலும் ஏப்ரல் 30 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 31 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான 10-வது வகுப்பு பொதுத்தேர்வு, தமிழகத்தில் நிச்சயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே மாதம் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை என தெற்கு ரயில்வே சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது குழந்தைக்கு வெளித்தொடர்பு ஏதும் இல்லாத நிலையில், தொற்றுக்கான தொடர்பை கண்டறிய சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது.