முன்னாடியே 'இத' பண்ணியிருந்தா 'காப்பாத்தி' இருக்கலாம்... வெள்ளை மாளிகையின் 'முக்கிய' அதிகாரி 'அதிர்ச்சி' தகவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 14, 2020 12:05 AM

முன்னரே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தால் வைரஸ் பரவலைத் தடுத்திருக்கலாம் என ஆண்டனி ஃபெஸி தெரிவித்துள்ளார்.

US Earlier Coronavirus Response Could Have Saved Lives Dr Fauci

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிப்பட்டுள்ள நாடாக உள்ள அமெரிக்காவில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,433 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,115 ஆகவும் உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது அந்த நாட்டுக்கு மட்டும் அனுமதி மறுத்துவிட்டு, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களை அனுமதித்ததாலேயே அமெரிக்கா மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா கொரோனாவால் மட்டுமல்லாது பொருளாதார ரீதியிலும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா இதுபோன்ற மோசமான நிலைக்கு வராமல் முன்னரே தடுத்திருக்க முடியும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை மூத்த அதிகாரியும் வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான மருத்துவர் ஆண்டனி ஃபெஸி தெரிவித்துள்ளார். முன்னதாக பிப்ரவரி இறுதியிலேயே அமெரிக்காவில் ஊரடங்கு அறிவிக்க அதிபருக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், நாட்டின் பொருளாதாரம் மோசமடையும் என ட்ரம்ப் அதைப் புறக்கணித்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ஃபெஸி, "தொடக்கத்தில் சரியாக பயணித்து முன்னரே நாம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தால் அமெரிக்கா இந்த நிலைக்கு வராமல் தடுத்திருக்கலாம். அதை செய்திருந்தால் தற்போது அமெரிக்காவின் நிலையே வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் அப்போது ஊரடங்கு அறிவிப்பதில் நிறைய பின்னடைவுகள் இருந்தன. நீண்ட ஆலோசனைக்கு பிறகே ஊரடங்கு பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது அமெரிக்காவின் நிலையை நாமே சிக்கலாக்கிவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.