'ஓடும் பேருந்தில் இளைஞரை பெல்ட்டால் அடித்த 2 சகோதரிகள்'... 'சுக்குநூறான இளைஞரின் கனவு'... வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரே ஒரு வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியா'குல்தீப்' இந்த பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா முழுவதும் வைரலான ஒரு வீடியோவால் பலராலும் அறியப்பட்டவர் தான் ஹரியானவை சேர்ந்த 25 வயதான இளைஞர் குல்தீப். குல்தீப்பின் தந்தை பல்பீர் சிங் ராணுவத்தில் பணியாற்றியவர். இதனால் சிறு வயது முதலே குல்தீப்பிற்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்தது. அதே நேரத்தில் மற்ற அரசு வேலைகளுக்கான தேர்வையும் குல்தீப் எழுதி வந்தார்.
அந்த வகையில் ஹரியானா SSC தேர்வையும் அவர் எழுதியுள்ளார். அதன் மூலம் அவருக்கு அம்மாநில ஆயுதப் படை போலீஸ் பிரிவில் வேலையும் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் அவரது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. ரோத்தக் நகரில் ஓடும் பேருந்தில் இரண்டு சகோதரிகள் 3 இளைஞர்களை திடீரென பெல்ட்டால் தாக்கினார்கள். அங்கிருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது எனப் புரியாமல் இருந்தது. அப்போது அந்த 3 இளைஞர்களும் தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் அடித்ததாகக் கூறினார்கள்.
அதோடு அந்த இளைஞர்கள் மூவர் மீதும் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்த 2 பெண்கள் அடிக்கும் வீடியோ நாடு முழுவதும் வைரலானது. 2 இளம் பெண்களையும் வீர மங்கைகள் எனப் பலரும் புகழ்ந்து தள்ளினார்கள். இதற்கிடையே நாடே கொந்தளித்த அந்த புகாரில் சம்மந்தப்பட்டவரும், அடிவாங்கிய 3 இளைஞர்களில் ஒருவரும் தான் குல்தீப். வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றம் செய்தமைக்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்ற காரணத்தினால் குல்தீப் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே இரண்டு நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் குல்தீப் குற்றவாளி இல்லை என நீதிபதிகள் சொல்லி அவரை விடுதலை செய்துள்ளனர். ஆனால் குல்தீப்பின் காவல்துறையில் சேர வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலே உள்ளது. இதையடுத்து மாநில அரசு உரிய உதவி செய்ய வேண்டுமென்றும், அவரின் கனவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலரும் சமூக வலைத்தளத்தில் ஹரியானா முதல்வருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
His name is #Kuldeep. He was falsely accused of Molestation by #RohtakSisters & DISCHARGED by 2 courts
He cleared HSSC exam for Grade D, had to join at HAP Madhuban. But his joining hs been stalled due to FALSE FIR under 354
I humbly request u @cmohry @mlkhattar Ji to intervene pic.twitter.com/GYts9O28g2
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) September 14, 2020