தாறுமாறாக சென்ற கார் மோதி பெண் உட்பட 4 பேர் தூக்கிவீசப்பட்ட கோர விபத்து..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 09, 2019 04:48 PM

சென்னையில் கார் ஒன்று இருசக்கர வாகனங்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Car accident in Chennai caught on CCTV camera

சென்னை தாம்பரம் கேம்ப் ரோட்டில் தாறுமாறாக சென்ற கார் ஒன்று சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் மீது மோதி முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கரவாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர். இதில் காயமடைந்த கல்லூரி மாணவர்கள் விக்ரம், கிளாட்சன் மற்றும் ஆறுமுகம்-சாந்தி தம்பதியினர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் 18 வயது நிறம்பாத பள்ளி மாணவர் என கூறப்படுகிறது.

Tags : #CCTV #CHENNAI #ACCIDENT