'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 10, 2019 02:35 PM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரேக் பிடிக்காததால், டிரக் மீது மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

jharkhand bus accident 11 dead, 25 injured

ஹசாரிபாக்கில் தனுவா பானுவா என்ற இடத்துக்கு அருகே இன்று காலை வழக்கம் போல பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரேக் செயலிழந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்து எதிரே வந்த டிரக் வாகனம் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 25 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.

Tags : #ACCIDENT #JHARKHAND #BUSACCIDENT