'பேக்கரிக்குள் நுழைந்த காரால் பரபரப்பு'... அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதால் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 14, 2019 01:49 PM

திருப்பூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

car accident in tirupur and driver thrashed by public

திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று, பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் வழியாக அதிவேகத்தில் சென்றது. அப்போது எதிரே பள்ளி வாகனம் வருவதை கண்ட கார் ஓட்டுநர், காரை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் காரை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர், பள்ளி வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வலது பக்கம் திருப்பியுள்ளார். அப்போது சாலையை கடந்து சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது.

அதோடு நில்லாமல் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் காரின் மீது மோதி பேக்கரிக்குள் புகுந்தது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். கார் கட்டுப்பாட்டை இழந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதனிடையே அந்த கார் ஓட்டுநரின் பெயர் சூர்யபிரகாஷ் என்பதும், குங்குமம்பாளையம் பிரிவில் உள்ள கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்துள்ளது. அவரை பொதுமக்கள் சிறைபிடித்து வைத்த நிலையில், யாரும் அறியா வண்ணம் தப்பிச் சென்றுவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #CAR