திடீர்னு கிணத்துக்குள்ள இருந்து 'டமார்'ன்னு ஒரு சவுண்ட், போய் பார்த்தா...! 'கணவனோடு சண்டைப் போட்டுக்கொண்டு...' அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி சுப்ரமணியபுரம் கோனார் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(35), தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி மைதிலி(30). இவர்களுக்கு 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் சந்தோஷ்குமார் வெளியூரில் தங்கியிருந்து பணிபுரிவதால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து மனைவி மகளுடன் இருந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் மனைவியிடம் போனில் பேசியுள்ளார். அப்போது கணவன், மனைவிக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை கோவத்தில் திட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இதனால் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்த மைதிலி, நேற்று அதிகாலையில் 9 மாத கைக்குழந்தையுடன் வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் குதித்தார். அதிகாலை நேரம் திடீரென கிணற்றில் பயங்கர சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் கண் விழித்தனர். மேலும், பெண் மற்றும் குழந்தையின் அழுகுரல் கேட்டதால் ஓடி வந்து கிணற்றில் டார்ச் லைட் அடித்து பார்த்தனர். அப்போது இருவரும் கிணற்றில் தண்ணீரில் தத்தளிப்பது தெரிந்தது. இது குறித்து உடனடியாக இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மில்கியூராஜா தலைமையில் இஆர்டி எனப்படும் சிறப்புக் குழு கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு கட்டி 35 அடி கிணற்றில் இறங்கி 5 அடி ஆழமுள்ள நீரில் தத்தளித்து கொண்டிருந்த தாயையும், குழந்தையையும் கயிறு கட்டி மீட்டனர். மேலும் கிணற்றுக்கு அருகே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்சில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்து தாயையும் குழந்தையையும் மீட்ட தீயணைப்புத்துறையினர், மற்றும் 108 ஆம்புலன்ஸை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். எதற்காக குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து மைதிலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
