யாரை முதல்ல போட்டோ எடுக்குறது?.. மாப்பிள்ளை - பெண் வீட்டார் இடையே வந்த தகராறு.. களேபரமான கல்யாண வீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கல்யாணத்தன்று யாரை முதலில் புகைப்படம் எடுப்பது என மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டினர் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "தம்பி நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்குக்கே Tough கொடுத்த மாணவர்.. மஸ்க்கின் அதிரடி..!
உத்திர பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அருகில் உள்ள மாதவ்பூரில் திருமணம் நடத்த இருவீட்டினரும் சம்மதித்திருக்கின்றனர். தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணத்தின் போது, மணமகளின் வீட்டினர் சிலர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, புகைப்படங்கள் எடுக்கப்பட்டிக்கின்றன. இதனால் மணமக்கள் தயாராகி நின்ற நிலையில் யார் முதலில் புகைப்படம் எடுப்பது என மணமகள் - மணமகன் வீட்டினர் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, இதுகுறித்து இருவீட்டினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. இதனால் மணப்பெண்ணின் சகோதரி உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து கல்யாணம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் இருவீட்டினரையும் சமாதானப்படுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சதர் மருத்துவமனையில் சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி பல்ராம் சிங்,"வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் திருமண விழாவில் புகைப்படம் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. ஒரு குழுவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.
திருமண வீட்டில் யாரை முதலில் புகைப்படம் எடுப்பது என மணமகன் - மணப்பெண் வீட்டினரிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | எப்புட்றா.. ஒரே பந்துல 7 ரன்கள்.. இந்தியா- வங்கதேச டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. வீடியோ..!

மற்ற செய்திகள்
