3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர்.. நள்ளிரவில் இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரம். !
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் பகுதியில் நடுரோட்டில் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவின் KP அக்ரஹாரா என்னும் பகுதியில் சாலையில் ஒரு உடல் கிடப்பதை அறிந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் வந்த போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
இதன் பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடும் அதிர்ச்சி ஒன்று போலீசாருக்கு காத்திருந்துள்ளது
இது தொடர்பாக வெளியான காட்சிகள் படி, கர்நாடகாவின் ஜமக்காண்டி என்னும் பகுதியை சேர்ந்த பாலப்பா, பெங்களூருவின் KP அக்ரஹாரா பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது அந்த சிசிடிவி காட்சியில், பாலப்பாவுடன் ஒரு சில தினங்கள் முன்பாக, இரவு நேரத்தில் சில ஆண்கள் மற்றும் பெண்கள் முதலில் பேசிக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.
முதலில், அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரியும் நிலையில், திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, பாலப்பாவை அங்கிருந்த அனைவரும் தாக்க ஆரம்பித்ததாக சொல்லப்படும் நிலையில், அவரை பெரிய கற்கள் கொண்டு தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மொத்தமாக 6 பேர் பாலப்பாவை தாக்கிய நிலையில், முதலில் அதில் இருந்த பெண் ஒருவர், கல்லை எடுத்து தாக்குவது தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, மற்ற ஒரு நபரும் கல்லை கொண்டு தாக்க தொடங்க, மற்றவர்கள் அனைவரும் அவரை பிடித்து கீழே வைத்துள்ளனர். தலையில் தொடர்ந்து தாக்கிய நிலையில், காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பாலப்பா இறந்து போனதாகவும் தெரிகிறது.
அந்த கும்பலில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்தும், எதற்காக அவர்கள் பாலப்ப்பாவை கொலை செய்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அதன் முதற்கட்ட விசாரணையில், பெண் விவகாரத்தில் பாலப்பாவுடன் அவர்கள் சண்டை போட்டு கொலை செய்ததாகவும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரவு நேரத்தில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் இளைஞர் ஒருவரை கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
