கல்யாண ஊர்வலத்தை நிறுத்திட்டு போராட்டத்திற்கு சென்ற மணமகன்.. அங்க இருந்தவங்களே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க.. வைரல் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரகாண்ட் மாநிலத்தில் கல்யாண ஊர்வலத்தை நிறுத்திவிட்டு மாப்பிள்ளை ஒருவர் போராட்டத்தில் கலந்துகொண்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
Also Read | வீடுகட்ட குழி தோண்டுனப்போ கிடைச்ச புதையல்.. ஆத்தாடி இதெல்லாம் அவரோடதா?.. வெளிவந்த 1000 வருஷ மர்மம்..!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹைடாகான் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டுள்ள கத்கோடம் - ஹைடகான் சாலையைத் திறக்கக் கோரி காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதி வழியாக திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இதனிடையே கல்யாண மாப்பிள்ளை ராகுல் குமார் ஊர்வலத்தை நிறுத்திவிட்டு போராட்டத்தில் கலந்துகொண்டார். கோட்டாபாக் பகுதியைச் சேர்ந்த மணமகன் ராகுல் குமார், சாலை திறக்கப்படாததால் 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டியுள்ளது என்றார். இதுபற்றி ராகுல் பேசுகையில்,"இந்த சாலை நீண்டகாலமாக சேதமடைந்துள்ளது. ஆனால் நிலச்சரிவுக்குப் பின்னர் நிலைமை மோசமாகிவிட்டது. மற்ற திருமண விருந்தினர்களும் நானும் இங்கு வருவதற்கு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது”, என்றார்.
காங்கிரஸ் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா, இதுகுறித்து பேசுகையில், "நவம்பர் 15 அன்று நிலச்சரிவால் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்தது. அதன் பின்னர், கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்தும், இந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்த சாலை மூடப்பட்டுள்ளதால் சுமார் 200 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்... மறுபுறம், விவசாயிகளின் பயிர்கள் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் வீணாகி வருகிறது. ஆனால், மாநில அரசும், நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
நைனிடாலில் உள்ள பாஜக மூத்த தலைவர் பிரதாப் சிங் பிஷ்ட், சாலை சேதமடைந்துள்ளதால் சாலை விரிவாக்கத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஒருமாத காலமாக மூடப்பட்டுள்ள சாலையை மீண்டும் திறக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள திருமண ஊர்வலத்தை நிறுத்திவிட்டு மணமகன் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.