எப்புட்றா.. ஒரே பந்துல 7 ரன்கள்.. இந்தியா- வங்கதேச டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - வங்க தேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரே பந்தில் 7 ரன்களை இந்திய அணி பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
![Bangladesh concede 7 runs in 1 ball against first Test Match Bangladesh concede 7 runs in 1 ball against first Test Match](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/bangladesh-concede-7-runs-in-1-ball-against-first-test-match.jpeg)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதனையடுத்து, வங்க தேசத்திற்கு சென்ற இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்க தேசம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், நேற்று சாட்டோகிராம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் விளையாடினர். இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய பண்ட் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல, ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடி 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் சிறப்பாக விளையாடிய அஷ்வின் அரைசதம் எடுத்தார். இந்த போட்டியில் டைஜூல் வீசிய பந்தில் இந்திய அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. 112 வது ஓவரை டைஜூல் வீச வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை டிரைவ் ஆட அஷ்வின் நினைத்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டு தெர்ட் மேன் திசையில் ஓடியது. இதனால் அஷ்வின் - குல்தீப் யாதவ் ஜோடி இரண்டு ரன்களை எடுத்தனர்.
அப்போது, பீல்டிங் செய்த வங்கதேச வீரர் பந்தை கீப்பருக்கு வீச, அது கீழே வைக்கப்பட்டிருந்த ஹெல்மட்டில் வந்து விழுந்தது. இதனால் பெனால்டியாக 5 ரன்களை அம்பயர் கொடுத்தார். இது வங்க தேச வீரர்களை அதிருப்தியடைய செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
5 penalty runs !!
Yasir Ali hits the ⛑️ pic.twitter.com/pMQ373lMWZ
— Cricket Videos (@kirket_video) December 15, 2022
Also Read | "தம்பி நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்குக்கே Tough கொடுத்த மாணவர்.. மஸ்க்கின் அதிரடி..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)