வழிவிடுங்க.. கல்யாண மாப்பிள்ளையுடன் மாஸ் எண்ட்ரி கொடுத்த செல்ல நாய்.. அது போட்ருந்த ட்ரெஸ் தான்.. கியூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்யாண மாப்பிள்ளை ஒருவர் தனது செல்ல நாயுடன் இருசக்கர வாகனத்தில் திருமண மண்டபத்திற்கு வரும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | அண்ணனின் விபரீத முடிவு.. கதறியழுத தம்பிக்கு திடீர்னு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்..!
இணையத்தின் வளர்ச்சியால் சமூக வலை தளங்களின் வீச்சு தற்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். எளிதில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் சமூக வலை தளங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் வைரலாகி விடுவது உண்டு. குறிப்பாக மக்களின் மனதை கவரும் சம்பவங்கள் இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற தவறுவதில்லை. அப்படியான வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு செல்லப் பிராணிகள் மீது எப்போதுமே ஒரு காதல் உண்டு. இப்போது என்று இல்லை. மனிதர்கள் நாடோடிகளாக இருந்த காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்த்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். விவசாயத்திற்கு மாடு வளர்ப்பில் துவங்கி நாய், பூனைகள் ஆகியவற்றை மனிதர்கள் வளர்த்து வந்ததற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நவீன காலத்திலும் வளர்ப்பு பிராணிகள் மீது மக்களுக்கு இருக்கும் காதல் குறையவில்லை. அந்த வகையில், supermebakarwadi எனும் இன்ஸ்டாகிராம் பயனர் தனது பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில், திருமண கோலத்தில் இருக்கும் ஆண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தனது நாயுடன் வருகிறார். அதனை சுற்றி நிற்கும் நபர்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். புன்னகையுடன் அந்த வாலிபர், வாகனத்தை ஓட்ட அந்த நாய் அமைதியாக அனைவரையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது. இந்த வீடியோவில் அந்த நாய்க்கும் வித்தியாசமான ஆடை ஒன்று அணிவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த நிகழ்வு எங்கே எப்போது நடைபெற்றது என்பது தெரியவில்லை. இதுவரையில் இந்த வீடியோவை 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். அதேபோல, 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர்.
நெட்டிசன்கள் இந்த வீடியோவில்,"நாய்கள் மீது பிரியம் வந்துவிட்டால் அவையும் நம்முடைய குடும்பத்தில் ஒருவர் போலத்தான்" என்றும் "நான் பார்த்த சிறந்த வீடியோ" என்றும் "இந்த நாய் மிகவும் கியூட்டாக இருக்கிறது" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Also Read | “யாரு சாமி இவங்க” .. ஓடும் ரயில்ல ஓட்டைய போட்டு எண்ணெயை ஆட்டைய போட்ட ஆசாமிகள்.. வீடியோ..!

மற்ற செய்திகள்
