'அந்த' 2 பேரு தான் காரணம்... பாக்கெட்டில் இருந்த 'தற்கொலை' கடிதம்... மார்க்கெட்டில் தொங்கிய உடல்... மாநிலத்தை அதிர வைத்த எம்.எல்.ஏ மரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jul 13, 2020 07:00 PM

மார்க்கெட்டில் எம்.எல்.ஏ உடல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

Bengal BJP MLA Debendra Nath Ray Found Hanging In Market

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு தினாபூர் மாவட்டம், ஹேம்தாபாத் பகுதியில் பாஜக எம்.எல்-ஏ-வாக இருப்பவர்  தேபேந்திரநாத் ராய். இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள மார்க்கெட்டில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேற்கு வங்காள போலீசார் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், ''ஹேம்தாபாத் பகுதி எம்.எல்.ஏ-வின் உடல் மார்க்கெட்டிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவரது பாக்கெட்டில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது அதில் தற்கொலைக்குக் காரணமாக இரண்டு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதற்குள் மக்கள் தாங்களாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு வதந்தி பரப்ப வேண்டாம் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்,'' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நேற்றிரவு 1 மணிக்கு சிலர் வந்து அவரை அழைத்து சென்றனர். எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். பாஜக தரப்பினரும் தேபேந்திரநாத் ராய் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bengal BJP MLA Debendra Nath Ray Found Hanging In Market | India News.