கொஞ்சம் கூட 'சுத்தம்' இல்ல, 'கைகழுவ' தண்ணி இல்ல... மொதல்ல 'அதை' இழுத்து மூடுங்க... ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்த நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 16, 2020 12:36 PM

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் டாஸ்மாக்கை இழுத்து மூடுமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

Case filed in Chennai High Court, to Close Tasmac shop

இதுதொடர்பாக வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகம் செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.