தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jul 30, 2019 05:10 PM
பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வியை ஒழுங்குபடுத்த புதிய மசோதாவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஆந்திராவின் முதல்வராக பதியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.
இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வியை ஒழுங்குபடுத்த புதிய மசோதவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தை முறைப்படுத்துதல், கல்வியின் தரத்தை அதிகரித்தல், பள்ளிகளின் நிலை மற்றும் மாணவர்களின் செயல்களை கண்காணிக்க என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘சட்ட மன்றத்தில் இருக்கும் பல அமைச்சர்களுக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளது. அவற்றில் கூட எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகது’ என ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.