உலகக்கோப்பை ‘ஃபைனல்ஸ்ல நடந்தத பாத்தீங்கள்ல?’.. தமிழக அமைச்சரின் அடுத்த 'அதிரடி பஞ்ச்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 15, 2019 01:18 PM

தமிழக அமைச்சர் ஜெயகுமார் பேசும் ஒவ்வொன்றும் வார்த்தைகள் அல்ல வைரல்கள் என்று சொல்லும் அளவுக்கு, சமீபத்தில் அவர் பேசிய அதிரடியான கருத்துக்கள் எல்லாமே இணையத்தில் டிரெண்டாகின.

Jayakumar compares AIADMK and DMK instead of ENGvNZ CWC19

முன்னதாக உலகக் கோப்பையில் தான் விளையாடியிருந்தால், இந்திய அணி ஜெயித்திருக்கும் என்று கூறி அனைவரையும் அதிரவைத்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார், ‘ஒரே ஒரு முறை சான்ஸ் கொடுத்து பாருங்களேன்’ என்றும் கூறியிருந்தார். இந்த பேச்சு வைரலானது.

அதன் பின்னர் தற்போது காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘உலகக் கோப்பையை நியூஸிலாந்து ஜெயிப்பது போல ஒரு மாயத்தோற்றம் தோன்றி, இறுதியில் இங்கிலாந்து வென்றது; நியூஸிலாந்து அணி திமுக போல, அது ஜெயிப்பது போலத் தோன்றலாம், ஆனால் இங்கிலாந்து போல அதிமுகவே இறுதியில் வெல்லும்’ என்று அதிரடியாய்க் கூறியுள்ளார்.

Tags : #AIADMK #DMK #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #JAYAKUMAR #ENGVNZ #ICCCRICKETWORLDCUP2019