'நிறைமாத கர்ப்பிணிக்கே இல்லையா'... 'பைக்கில்' கூட்டிட்டு போன அவலம்'... அதிரவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 28, 2019 11:00 AM

நிறைமாத கர்ப்பிணியை 10கிமீ பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கொடுமை ஜார்கண்டில் நடந்துள்ளது.

bleeding pregnant woman taken to hospital on a bike in Jharkhand

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சாந்திதேவி. 30 வயது  நிரம்பிய நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவ வலியால் துடித்துள்ளார். இதையடுத்து சாந்திதேவியை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல முடிவு செய்து ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் அவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்க, சாந்திதேவி வலியால் துடித்து மயக்க நிலைக்கு சென்று விட்டார்.

இதனிடையே இப்படியே விட்டால் சாந்திதேவியின் நிலைமை மோசமடையும் என்பதனை உணர்ந்த அவரது குடும்பத்தினர், இருசக்கர வாகனத்தில் ஏற்றி 10 கிமீ பயணம் செய்து CHC என்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அவரை 27கிமீக்கு அப்பால் உள்ள RIMS மருத்துமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் இந்த முறை ஆம்புலன்ஸ் வசதியை அளித்த CHC மருத்துவமனை, பலத்த போராட்டத்திற்கு பின்பு  சாந்திதேவி RIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நடந்த சம்பவம் குறித்து பேசிய சாந்திதேவியின் கணவர் '' நிறைமாத கர்ப்பிணியான எனது மனைவிக்கு  வலி ஏற்பட அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தோம். ஆனால் எங்களுக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லலாம் என முயன்றும் அதுவும் வீணாக போனது. இப்படியே விட்டால் நிலைமை மோசமாகும் என்பதனை உணர்ந்து, வேறு வழி இல்லாமல் பைக்கில் மருத்துவமைக்கு கொண்டு சென்றோம் என அவர் தெரிவித்தார்.

நடந்த சம்பவம் குறித்து பேசிய CHC மருத்துவமையின் தலைமை மருத்துவர் '' மருத்துவமனைக்கு சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸும் 108 ஆம்புலன்ஸ் ஒன்றும் உள்ளது. ஏற்கனேவே கர்ப்பிணி ஒருவரும் பிரசவ வலியால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போனது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என கூறினார்.

Tags : #JHARKHAND #PREGNANT WOMAN #AMBULANCE #BLEEDING #SHANTI DEVI #CHC