'அசாம் மாநிலத்தை மிரட்டும் புதிய காய்ச்சல்'... 'கொத்து கொத்தாக இறந்த பன்றிகள்'... இந்தியாவில் இது தான் முதல் பாதிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 04, 2020 10:32 AM

கொரோனா குறித்த அச்சம் நாடு முழுவதும் நிலவி வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

African Swine flu detected in Assam, 2,500 pigs killed

அசாம் மாநிலத்தில் தற்போது ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகப் பேசிய அம்மாநில அமைச்சர் அதுல் போரா, ''தற்போது அசாமில் கண்டறியப்பட்டுள்ள காய்ச்சல் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் ஆகும். விலங்குகளுக்கு உண்டாகும் நோய்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் 'NIHSAD' என்ற நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது. ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் முதல் நிகழ்வு இது தான் என மத்திய அரசு உறுதி செய்துள்ளது'' .

இதற்கிடையே கொரோனாவிற்கும், ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ''கொரோனாவிற்கும் இந்த காய்ச்சலுக்கும் துளியும் தொடர்பு இல்லை. அதையும் இந்த காய்ச்சலையும் தொடர்புப்படுத்த வேண்டாம் எனக் கூறினார். மேலும் 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அசாம் மாநிலத்தில் பன்றிகளின் எண்ணிக்கை 21 லட்சம். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து 30 லட்சமாக உள்ளது.

இந்த காய்ச்சலிலிருந்து பன்றிகளை அளிக்காமல் காப்பாற்ற முடியுமா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆப்ரிக்க பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2500 பன்றிகள் இறந்துள்ளது. இது சற்று அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இருப்பினும் பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி 1கிமீ சுற்றளவிற்குப் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.