'அரசு வேலை கிடைக்குறதே கஷ்டம்'...'இனிமேல் இது வேற இருக்கு'... அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 22, 2019 02:56 PM

அரசு வேலை என்பது பலருக்கு கனவாக இருக்கும் நிலையில், அசாம் மாநில அரசின் அறிவிப்பு அம்மாநில மக்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

No govt jobs for people with more than two children

அசாமின்  மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . அதன்படி இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்ளுக்கு  அரசாங்க வேலை இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்கை முடிவு ஜனவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலமற்ற பழங்குடி மக்களுக்கு விவசாயத்திற்கு 3 பிக்ஹாக்கள் (43,200 சதுர அடி) நிலமும் வீடு கட்டுவதற்கு அரை பிக்ஹா வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்துவோர் 15 வருட பயன்பாட்டிற்குப் பிறகுதான் நிலத்தை விற்க முடியும். அதனைத்தொடர்ந்து பஸ் கட்டணங்களை 25 சதவீதம் அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #JOBS #ASSAM #GOVT JOBS #TWO CHILDREN