"நாளைக்குத் தான வெளிய எடுக்குறதா பேச்சு..." "நல்லா தூங்கிட்டு இருந்தவன ஏன்டா எழுப்பி விட்டீங்க..." பயங்கர 'கோபக்காரனா' இருப்பான் போல...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 22, 2020 05:19 PM

குழந்தை ஒன்று தாயின் கருவறையிலிருந்து வெளியே எடுத்தவுடன் சுற்றி நின்ற மருத்துவர்களை முறைத்து பார்க்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

A stunning photo of a Newborn baby viral on social media

பொதுவாக குழந்தைகள் பிறந்தவுடன் நன்கு  அழ ஆரம்பித்து விடும். ஆனால் அதற்கு மாறாக பிறந்த குழந்தை ஒன்று சுற்றி நின்றவர்களை கண்ணிமைக்காமால் முறைத்து பார்ககும் புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இணையவாசிகள் பலரும் இந்த குழந்தையின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என கற்பனை செய்து அவர்களுக்கேற்றார் போல் கேப்சன்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாளைக்குத் தான என்னை வெளிய எடுக்கறதா பேச்சு, இப்பவே ஏன் எடுத்தீங்க? என குழந்தை நினைப்பது போலவும் நல்லா தூங்கிட்டு இருந்தவன ஏன்டா எழுப்பி விட்டீங்க என குழந்தை கேட்பது போலவும் இதற்கு பல கேப்சன்களை பதிவிட்டு இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Tags : #BORN BABY #STUNNING LOOK #VIRAL PICTURE #SOCIAL MEDIA