3 அவிச்ச 'முட்டை'க்கு இத்தனை 'ஆயிரம்' பில்லா?.. 'பிரபல' இசையமைப்பாளர் ஆதங்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 15, 2019 12:56 PM

சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த தொகையை விட பில் அதிகமாக வந்தால் அந்த ஆதங்கம் நம்மை விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது. அதை சொல்லிச்சொல்லி மாய்ந்து போவோம். அந்த வகையில் இசையமைப்பாளர் ஒருவர் அவிச்ச முட்டைகளுக்கு வந்த பில்லை பார்த்து தலை சுற்றிப்போய் இருக்கிறார்.

Music composer Shekhar Ravjiani charged Rs 1672 for 3 eggs

இந்தி இசையமைப்பாளரும், பாடகருமான சேகர் ராவ்ஜியானி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 3 அவிச்ச முட்டைகளுக்கு வரிகளுடன் சேர்த்து 1672 ரூபாய் பில் போடப்பட்டு இருக்கிறது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் கிண்டலாகவும், சிலர் சீரியஸாகவும் அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.

 

Tags : #TWITTER