'காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன்'... 'பதறவைக்கும் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 30, 2019 01:08 PM

காதலை பிரேக் அப் செய்ததால், காதலியை காதலன் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி பதறவைத்துள்ளது.

Youth stabs MBA student, attempts suicide in karnataka

கர்நாடக  மாநிலம் மங்களூருவில் எம்பிஏ படித்து வந்த  தீக்ஷா என்ற பெண்ணும், அதேப் பகுதியில் பள்ளி வகுப்பை பாதியிலேயே விட்டு, நடன பயிற்சியாளராக இருந்து வந்த சுகந்த் என்பவரும், கடந்த 4 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர், காதலன் சுகந்த்தின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாகவே சுகந்த் உடனான காதலை முடித்துக் கொண்டு உள்ளார் தீக்ஷா.

பின்னர் விடாது துரத்திய, சுகந்த் ஒரு கட்டத்தில் தீக்ஷாவிடம் கோபமாக நடந்துகொண்டும், போகும் போதும் வரும் போதும் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சுகந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமையன்று தீக்ஷா கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது வழிமறித்து, தான் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தி உள்ளார்.

தீக்ஷாவின் மார்பு, வயிறு மற்றும் கால் என 20 இடங்களில் கத்தியால் சரமாரியாக  குத்தியதால் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து துடி துடிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது. பின்னர் சுகந்தும் தன் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொள்கிறான். இருந்தாலும் காதலனுக்கு உயிருக்கு ஆபத்தாகும் அளவிற்கு எங்த காயமும் ஏற்பட வில்லை.  தீக்ஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KARNATAKA #STABBED #HORRIFYING