'இது நம்ம லிஸ்ட்லே இல்லையே'...' கெத்து காட்டிய ஸொமாட்டோ பாய்'... பாராட்டிதள்ளும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 04, 2019 03:19 PM

ஸொமாட்டோ ஊழியர் ஒருவர் நெட்டிசன்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நிச்சயம் இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

Zomato Delivery Boy Saves 5 Months\' Salary To Buy His Dream Bike

ஹரியானா மாநிலம் கர்ணல் பகுதியை சேர்ந்தவர் சூரஜ். இவர் ஸொமாட்டோ  நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலையை செய்து வருகிறார். இவருக்கு தற்போதைய இளைஞர்களின் கனவு பைக்கான கேடிஎம்(KTM RC 200) வகை பைக்கினை வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக கடினமாக உழைத்த அவர், தனக்கு வரும் சம்பள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்க ஆரம்பித்தார். அவ்வாறு ஐந்து மாதங்கள் சேகரித்த பணத்தை வைத்து தான் பெரிதும் ஆசைப்பட்ட கேடிஎம் பைக்கை வாங்கியுள்ளார். சூரஜின் இந்த கடின உழைப்பை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் 'ஸொமாட்டோவின்  நிறுவனர் தீபிந்தர் கோயல்',  டெலிவரி பாய் சூரஜை பாராட்டி அவர் வாங்கிய புது பைக்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட, அது தற்போது வைரலாக பரவி வருகிறது. '' நீங்கள் கடினமாக உழைத்தால் எதுவும் உங்களை தடுக்க முடியாது'' என அவர் பதிவிட்டுள்ளார். தற்போது நெட்டிசன்கள் பலரும் சூரஜை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Tags : #TWITTER #DEEPINDER GOYAL #ZOMATO #SURAJ #KTM RC 200