'டிக்-டாக்ல லைக்ஸ்க்கு ஆசப்பட்டு'.. 'இப்படி மொத்தமா போய்ட்டியே'.. கதறிய பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 24, 2019 01:10 PM

சமீபத்தில் டிக்டாக்கில் சாகசம் செய்வதாகக் கூறி, ஜிம்னாஸ்டிக் செய்து தலைகீழாக டைவ் அடிக்க முயற்சித்த நபருக்கு அப்போது எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இந்த காரியம்டிக்-டாக்வீடியோவாக பரவி இணையத்தில் வைரலானது.

Kumar from Karnataka is dead after tried tiktok video

டிக்-டாக்கில் தன் திறமையைக் காட்ட முயன்று இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து என்னதான் கிடைத்துவிடப் போகிறது என்பன போன்ற பல கமெண்டுகளால் பலரும் இந்த இளைஞரை விமர்சிக்கச் செய்தனர். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள சிக்கநாயக்கனஹள்ளியைச் சேர்ந்த குமார் என்கிற இந்த இளைஞர் முன்னதாக பாடல், நடனம் என பலவற்றையும் டிக்-டாக்கில் பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில், இவர் சாகசத்துக்கு முயன்று, கீழே விழுந்த பிறகு கழுத்தெலும்பில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இந்த இளைஞர் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது பெற்றோர்கள், டிக்டாக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரையே இழந்துவிட்டானே என்று கதறி அழுதுள்ளனர். 

Tags : #TIKTOK #KARNATAKA