‘இறந்த குட்டியை இறுதி ஊர்வலமாக கொண்டுசெல்லும் யானைக்கூட்டம்’.. மனதை உருக்கும் வீடியோ காட்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 11, 2019 10:06 AM

இறந்த யானைக் குட்டியை, யானைக்கூட்டம் ஊர்வலமாக தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Elephants hold funeral procession for dead calf

தாய் யானை ஒன்று உயிரிழந்த தன்னுடைய குட்டி யானையை தும்பிக்கையின் மூலம் தூக்கி கொண்டு வந்துள்ளது. பின்னர் சாலை ஒன்றை குட்டியை தரையில் வைத்துவிட்டு சோகமாக நிற்கிறது. இதனை அடுத்து மற்றொரு யானைக்குட்டி அந்த இடத்திற்கு சோகமாக வருகிறது.

இதனை அடுத்து சில வினாடிகளில் சில யானைகள் தங்களது குட்டிகளுடன் வந்து, இறந்த குட்டியின் அருகில் சில வினாடிகள் நிற்கின்றன. பின்னர் தாய் யானை மீண்டும் தனது குட்டியை தும்பிககையால் தூக்கிசெல்ல மற்ற யானைகள் பின் தொடர்ந்து ஊர்வலமாக செல்கின்றன. மனதை உருக்கும் இந்த வீடியோவை கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ப்ரவீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : #KARNATAKA #FOREST #ELEPHANTS