'தலைகீழா தான் குதிக்க போறேன்'... 'டிக் டாக்'கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்' ... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jun 19, 2019 03:37 PM
தற்போதைய தலைமுறை இளசுகள் அதிகம் உபயோகப்படுத்தும் செயலி டிக் டாக்.இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சினிமா வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு நடித்தும்,நடனமாடியும் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே டிக் டாக்டில் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் செய்த செயல் அவருக்கே விபரீதமாக மாறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கோடேகெரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமார்.இவர், ‘டிக்-டாக்’ செயலியில் பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு உள்ளார். வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்த அவர்,தனது நண்பரின் உதவியுடன் சாகசத்தில் ஈடுபட முயற்சித்தார். அதாவது, சிறிது தொலைவில் இருந்து ஓடிவரும் குமார் தனது நண்பரின் உதவியுடன் தரையில் கைகள் படாமல் பின்புறமாக பல்டி அடிக்க முயற்சித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குமாரின் தலை தரையில் போய் இடித்தது. இதனால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டதோடு, முதுகெலும்பு முறிந்தது.இதனை கண்டு பதறிப் போன அவரது நண்பர்கள்,உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள்.அங்குஅவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனிடையே ‘டிக்-டாக்கில்’ வீடியோ பதிவிட,குமார் சாகசம் செய்து எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.