வார்னிங்: 'உங்கள் சொந்த ரிஸ்க்கில் இதைப் பார்க்கவும்’... ‘தோனியின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Dec 05, 2019 11:26 PM
இந்திய அணியின் மூத்த வீரரான தோனியின் எதிர்காலம் குறித்து பரவலாக பேசப்படும் நிலையில், அவ்வப்போது அவர் செய்யும் விஷயங்கள், தோனியின் ரசிகர்களால் ட்ரெண்டாகி வரும். அப்படி ஒரு வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகரும், பாடகருமான ஜஸி கில், தனது 31- வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரின் நண்பரான தோனி, இந்த நிகழ்ச்சிக்கு, தனது மனைவி சாக்ஷியுடன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டு மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய தோனிக்கும், சாக்ஷிக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில், அழகான ஃபோட்டோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார் பாடகர் ஜஸி கில்.
இந்நிலையில், நிகழ்ச்சின்போது, பாடகர் ஜஸி கில்லுடன் சேர்ந்து தோனி, பழைய ஹிந்தி பாடல் ஒன்றை பாடினார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு பகிரப்பட்டுள்ளது. ‘எச்சரிக்கை: உங்கள் சொந்த ரிஸ்க்கில் இதனைப் பார்க்கவும். மஹி மிகவும் திறமையானவர். இந்த போஸ்ட் பதிவு செய்தமைக்காக என்னை எதுவும் செய்ய வேண்டாம். விரைவில் சாக்ஷியின் வீடியோவும் பதிவிடப்படும்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.