'போதையில் இருந்த டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!'.. 'அடித்து உதைத்த ஊர்மக்கள்!.. தஞ்சாவூரில் பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 09, 2019 11:26 PM

தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இரண்டு பேரை ஊர் மக்கள் சரமாரியாக அடித்துத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

drunken men assaulted for abusing woman in Thanjavur

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தாலுகா, சிரமேல்குடி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய்க்கு, பெண் ஒருவர் உணவு கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

உடனே அப்பெண் அலறியுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, பாலியல் தொல்லை கொடுத்த இருவரையும் மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். விசாரித்ததில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களுள் ஒருவர் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் என்றும் அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags : #SEXUALABUSE #THANJAVUR