“4 மாச சம்பளம் அட்வான்ஸ்!”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்?’ - மாநில அரசின் ‘பாராட்டத்தக்க’ முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா எதிர்ப்பு போரின் ஒரு பகுதியாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மருத்துவர்களும் செவிலியர்களும் பிற மருத்துவ ஊழியர்களும் தங்கள் சேவைகளை தவறாமல் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தைப் பொருத்தரை, ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதேபோல் தற்போது ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
Tags : #ODISHA #CORONAVIRUSININDIA #DOCTORS #NURSES #MEDICALSTAFFS #21DAYSLOCKDOWN
