“உயிர் காக்க 21 நாட்கள்”.. “அவங்கள உதாசீனத்தவங்க பதவி இழப்பாங்க! இது சரித்திரம்!”.. கமல்ஹாசன் ‘வைரல்’ ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை உண்டுபண்ணி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் வகையில் இந்தியாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அதாவது மொத்தம் 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், "உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்." என்று குறிப்பிட்டுள்ளார்
Tags : #KAMALHAASAN #CORONAVIRUSININDIA #21DAYSLOCKDOWN #STAYHOMEINDIA #COVID19 #CURFEWININDIA
