‘31-ஆம் தேதி வரைக்கும் திரையரங்குகளை இழுத்து மூடுங்க!’.. ‘கொரோனா தாக்கத்தால்’.. ‘மாநில அரசு அதிரடி’ உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 11, 2020 11:44 AM

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் , கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும், வர்த்தக தொழில் மையங்களும், ஸ்தாபனங்களும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.

Corona - Theatres will be closed till this month end in Jammu Kashmir

இந்த நிலையில் ஜம்முவில் வருகிற 31-ஆம் தேதி வரை  சினிமா திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று அதிரடியாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பேசிய ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வருகிற 31-ஆம் தேதி வரை பந்திப்பூர், பாரமுல்லா, ஸ்ரீநகர் மற்றும் புத்கம் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 40-ஐக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜம்முவில் இருவர் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #JAMMU KASHMIR #THEATRE #CORONAVIRUSININDIA