“இதுக்காகவே அவரை பாராட்டணும்”.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி ஜெயம் ரவி ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 23, 2020 12:33 PM

கொரோனாவுக்கு எதிராக செயலாற்றி வரும் தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகளுக்கு ட்விட்டரில் நடிகர் ஜெயம் ரவி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

actor jayam ravi praises TN VijayaBaskar for his work against Corona

இதுபற்றி தனது ட்விட்டரில் “ட்விட்டரில் விஜயபாஸ்கரை கவனித்தேன். அவர் மேற்கொண்டுவரும் நல்லதொரு பணி மற்றும் கோவிட்-19 எனும் COVID-19 வைரஸ் பற்றி உருவாக்கி வரும் விழிப்புணர்வுக்காக அவர் பாராட்டுதலுக்குரியவர். நன்றி சார்.

தயை கூர்ந்து நம் மாநிலத்துக்கான சிறந்த முறையில் தாங்கள் செய்யும் பணியை தொடருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி சொல்லி ரிட்வீட் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  “தங்களது பண்பான வார்த்தைகளுக்கு நன்றி, நீங்களும் மக்களிடையே தூரமாக இருத்தல், தனிமைப்பட்டு இருத்தல், இந்த நோயில் இருந்து வரும் முன் தற்காத்தல் உள்ளிட்டவை பற்றிய 

விழிப்புணர்வை ஏற்படுத்துஙள்” என்றும் கேட்டுக்கொண்டார்.

Tags : #JAYAMRAVI #VIJAYABASKAR #COVID19 #CORONAVIRUSININDIA #SOCIALDISTANCE #QUARANTINE