‘சீனா’ பண்ண ‘அதே’ தவறை ‘இவங்களும்’ பண்றாங்க... பாதிப்பு ‘அதிகமாக’ அதுதான் காரணம்... சீன மருத்துவர்கள் ‘கவலை’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 21, 2020 12:01 AM

கொரோனா பாதிப்பை கையாளுவதில் சீனா செய்த அதே தவறை ஐரோப்பாவும் செய்வதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

China Doctors Say Europe Is Making The Same Mistakes

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், ஐரோப்பாவில் கடந்த சில வாரங்களாக வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதாக சீன அரசின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த மருத்துவர்கள் 3 பேர், சீனா செய்த அதே பெரிய தவறை ஐரோப்பாவும் செய்வதாகவும், அதனால்தான் அங்கு பாதிப்பு அதிகரிப்பதாகவும் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சீனாவைச் சேர்ந்த மருத்துவர்கள் பலரும் அதை ஆமோதித்துள்ளனர். அந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட தவறு, மருத்துவப் பணியாளர்களின் உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாததே ஆகும். தற்போதைக்கு ஐரோப்பா உட்பட பல நாடுகளும் தங்களுடைய மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்காக மாஸ்க், காகிள்ஸ், சானிடைஸர் போன்றவற்றை மட்டுமே வழங்குகின்றன. அவற்றையும் அடிக்கடி கழற்றி மாற்றவோ, சுத்தப்படுத்தி உபயோகிக்கவோ முடியாது என்பதால், அதையே நீண்ட நேரத்திற்குப் பணியாளர்கள் உபயோகப்படுத்தும் நிலையே உள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள சீன மருத்துவர்கள், “சீனாவில் கொரோனாவின் தீவிர தாக்குதலால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்கள் பலரும் 20 - 30 வயதைச் சேர்ந்தவர்களே. அதனால் இளம் வயதுடைய மருத்துவப் பணியாளர்களை நியமித்து பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என எந்த நாட்டின் அரசும் நம்ப வேண்டாம். உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய மருத்துவப் பணியாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.

Tags : #CORONAVIRUS #CHINA #WUHAN #DOCTORS #EUROPE